Saturday 29 June 2024

பன்னாட்டுக் கருத்தரங்கம்

 

சென்னை: செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியும் அமெரிக்காவைச் சேர்ந்த பசுமைக்குடி நிறுவனமும்  உயிர்மை  பதிப்பகமும் இணைந்து 28.6.2024 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தியது .. சி.டி.டி.இ மகளிர் கல்லூரியின் மொழித்துறைத் தலைவர் முனைவர் .பிரீதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

 இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர். மனுஷ்யபுத்திரன் கலந்துகொண்டு கருத்தரங்க ஆய்வுக்கோவை நூலை வெளியிட்டார்.   சி.டி.டி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மற்றும் செயலாளர் திரு. இல.பழமலை (..ப ஓய்வு )அவர்கள் தலைமை தாங்கி ஆய்வுக்கோவையின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ள நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. கவிஞர்.மனுஷ்யபுத்திரன் அவர்கள் உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நம் ஊரே என்ற கருத்தினை எடுத்துக் கூறியதோடு அனைத்து வினைகளும் நம்மில் இருந்தே பிறக்கின்றன என்ற தத்துவத்தை இலக்கியத்தோடு ஒப்பிட்டு சிறப்புரையாற்றினார். சி.டி.டி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் அவர்கள்  செவ்வியல் இலக்கிய நூல்களின் பரந்துபட்ட வாசிப்புத் தளத்தினூடே வாழ்வியல் ஒழுக்கக் கூறுகளைத் தத்துவ அடிப்படையில் எடுத்துக் கூறி தலைமையுரையாற்றினார்.

கல்லூரியின் துணை முதல்வர்  முனைவர்.குயின்சி ஆஷா தாஸ் , அமெரிக்காவின் பசுமைக்குடிநிறுவனர்திரு. நரேந்திரன் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் து.ராஜகுமார் கருத்தரங்க பொருண்மைகளை விளக்கியுரைத்தார். இக்கருத்தரங்கில் முப்பதுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் கட்டுரைகளை வழங்கி சிறப்புச் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்  முனைவர் பா.அனிதா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 முனைவர் க.பிரீதா,  முனைவர் து.ராஜகுமார் ஆகியோர் இப்பன்னாட்டுக் கருத்தரங்கைச்   சிறப்புற ஒருங்கிணைத்தனர்.

 







 

No comments:

Post a Comment