Friday 22 April 2016

WORLD BOOK DAY




World Book Day or World Book and Copyright Day (also known as InternationalDay of the Book or World Book Days) is a yearly event on April 23rd, organized by the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO), to promote reading, publishing and copyright.


🙏
வாசி  - அதை - நீ
நேசி
🙏
உலகப்புத்தக தினம் –
ஏப்ரல -23
🙏
*சன்னல்கள் இல்லாத வீடும் –
புத்தகங்கள் இல்லாத வீடும் பாழ்.
*எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று
லண்டன் தோழர்கள் கேட்டதற்கு –
எது நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டார்
டாக்டர்.அம்பேதகார்.

*தான் துக்கில் இடப்படுவதற்கு ஒரு நிமிடம்
முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம்
பகத்சிங்.

*மொத்த இறந்த காலத்தின் ஆன்மாவும் வசிக்கும்
இடம் புத்தகம் – தாமஸ் கார்னைல்.

*ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது
வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு
புத்தகம் வாங்குவாராம்-நடிகர் சார்லின் சாப்ளின்.

*எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ
அங்கே நல்ல மனிதர்களும் எரிக்கபடுவார்கள் –
சொன்னது சேகுவாரா
.
*ஒரு புத்தகத்தை திறக்கும்போது உலகை நோக்கிய
ஒரு சன்னலைத்திறக்கிறோம் – தோழர் சிங்காரவேலர்.
*வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தைத் தேடும் மனிதனுக்கும்
சோர்வில் கண் அயர புத்தக வாசிப்பை நாடும்
மனிதனுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது –
ஜி.கே.செஸ்டர்டன்.

*புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை – அவற்றின்
மேல் கவனம். இது உங்கள் வாழ்வையே
மாற்றிடக்கூறும்-என்று எச்சரிக்கை பொறிப்பது
நல்லது – எலன் எக்ஸ்லே.

*உங்களது தலை சிறந்த புத்தகங்களை திருடிச்
செல்பவர்கள் உங்களது தலை சிறந்த நண்பர்களாகவே
இருக்கமுடியும் – வால்டேர்.

*வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வாசிக்கவிரும்புவதற்காக
கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே – மார்க் ட்வெய்ன்.
*ஒரு புத்தகத்தை இறவல் தருபவன் முட்டாள் –
அதைத் திருப்பி தருபவன் அதைவிட பெரிய முட்டாள் –
அரேபிய பழமொழி.

*உலகிலுள்ள அனைத்துவகை துயரங்களின் விடுதலை
ஒரு புத்தகத்தில் உள்ளது.-கூகிவா திவாங்கோ.
*ஒரு நல்ல வாசகங்கொண்டே ஒரு நல்ல புத்தகம்
அடையாளம் கானப்படுகிறது – ஜார்ஜ் பெர்னாட்ஷா.

*யுத்தத்தில் கலந்துகொள்வதை விட கூடுதல் தைரியம்
ஒரு சில புத்தகங்களை வாசிக்கத் தேவைப்படுகிறது.
- எல்பர்ட் கிரிக்ஸ்.

*புத்தகங்கள் இருந்தால் போதும் சிறைக் கம்பிகளும்
கொட்டடிகளும் ஒருவரை அடைத்து வைக்கமுடியாது.
- மாவீரன் பகத்சிங்.

*ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதை
விட வெளியே ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே
இருக்கிறது – பிரடெரிக் எங்கெல்ஸ்.

*காலக் கடலில் நமக்கு வழிகாட்ட அமைக்கப்பட்ட
கலங்கரை விளக்கு புத்தகம் – எட்வின் பி.விப்பின்.

*ஒரு நாட்டின் வருங்கால சந்ததியினர் தேடித்தேடி
அடைய வேண்டிய அற்புதப் புதையல்கள் –
புத்தகங்களே – ஹென்றி தொறா.

*நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத
உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு
மந்திரக் கம்பளம், புத்தகமே – கரோலின் கோர்டான்.
*மார்டின் லுதர்கிங், ஒரு குழந்தைக்கு நீங்கள்,
வாங்கித் தரும் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்
என்றார்—

*ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்
என்று வின்ஸ்டன் சர்ச்சில் கேட்டபோது, ஒரு
நூலகம் கட்டுவேன் என்றாராம் – காந்தியடிகள்.

*தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்
என்று கேட்டபோது, புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக
வாழ்ந்துவிட்டு வருவேன் என்றாராம் நேரு.
*என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் –
இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று
என்றாரா,- பெர்ட்ரனட் ரசல்.

*கரண்டியை பிடுங்கிவிட்டு பெண்ணிடம் புத்தகம்
கொடுத்தால் போதும் என்றாராம் பெரியார்.
🙏

                                                                                       

No comments:

Post a Comment